உத்தரபிரதேசத்தில் பழைய பொருட்களை மறுசுழற்சி செய்து கலை பொருளாக மாற்றி வருவாய் ஈட்டி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தின் சஹ்ரன்பூரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் நட், போல்டு, பழைய ஆட்டோமொபைல் பாகங்கள், தையல் இயந்திர பாகங்கள் மற்றும் தேய்மானம் அடைந்த இயந்திரங்களின் பாகங்கள் போன்ற பல்வேறு இரும்பு பொருட்களை பயன்படுத்தி கலைப்பொருட்களை வடிவமைத்து வருகிறார்.
பழைய கழிவு பொருட்களைப் பயன்படுத்தி முற்றிலும் கையால் செய்யப்பட்ட மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அற்புதமான உலோகச் சிற்பங்களை அருண்குமார் உருவாக்கி வருகிறார். கொரிலா, குதிரை, சிங்கம், டைனோசர் போன்ற இவரது படைப்புகள் பூஜ்ஜிய கார்பன் தடம் கொண்டவை என்பதால் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
அருண்குமாரின் தனித்துவமான கலைப் படைப்புகள் இந்தியாவின் எல்லைகளைத் தாண்டிச் சர்வதேச சந்தைகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இவரது படைப்புகள் ஆயிரம் ரூபாய் முதல் 40 லட்சம் வரை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.
















