சென்னையில் தொழுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில், 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், நகர்ப்புற பகுதிகளில் புதிதாகக் கண்டறியப்பட்ட தொழுநோய் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, சென்னையில், ஐந்து ஆண்டுகளில், 515 பேருக்கு புதிதாகத் தொழுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் 2020-21ம் ஆண்டுகளில் லட்சத்தில் ஒன்று என்ற அடிப்படையில் இருந்த தொழுநோய் பாதிப்பு விகிதம், 2024-25ம் ஆண்டில் 1.3 விகிதமாக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் 2022-23-ல் 2 சதவிகிதத்திற்கு மேல் பாதிப்பு இருந்ததும் தெரியவந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை புதிய பாதிப்புகளின் விகிதம், தேசிய சராசரியைவிட குறைவாகவே இருந்தாலும், பெருநகரங்களிலும், குறிப்பாகச் சென்னையிலும் தொழுநோய் பரவலை ஒழிப்பதில் சிக்கல் நிலவுகின்றது.
மாநிலத்தின் சராசரி தொழுநோய் பாதிப்பைவிட சென்னையில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு விகிதம், அதிகமாக உள்ளது.
இதில் பெரும்பாலானோருக்கு குடும்பத்தினர், அண்டை வீட்டார்களிடம் இருந்து பரவில்லை என்றும், புலம்பெயர்ந்தவர்கள் வாயிலாக நோய் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகக்கிப்படுகிறது.
















