சீனாவில் டேப்லெட்டில் இருந்து திடீரென புகைவெளியேறியதால் அதனைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் தெறித்தோடிய வீடியோ வைரலாகி உள்ளது.
சீனாவில் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக Xiaomi இருந்து வருகிறது. கடந்தாண்டு அக்டோபரில் சீனாவில் முதன்முதலில் Xiaomi Pad 7 அறிமுகப்படுத்தப்பட்டது.
மென்மையான மற்றும் அதிவேக காட்சி அனுபவத்திற்காக 11.2-இன்ச்சில் LCD திரையை கொண்டுள்ளது. இந்த Xiaomi Pad 7 டேப்லெட் வேகமாகச் சார்ஜ் ஆகினாலும் பேட்டரி ஆயுள் சற்று குறைவாகவே உள்ளதாகப் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சீனாவின் பெய்ஜிங்கில் வீடு ஒன்றில் சிறுவன் Xiaomi Pad 7 டேப்லெட்டில் வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக டேப்லெட்டில் இருந்து புகை வெளியேறியது. டேப்லெட்டில் புகைவெளியேறியதால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன் கூச்சலிட்டவாறு அதனை தட்டிவிட்டு படுக்கையை விட்ட ஓட்டம் பிடித்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு வந்த சிறுவனின் தாய் டேப்லெட்டின் நிலை குறித்து ஆராய்ந்தார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் இது போன்ற தயாரிப்புகளை உலகம் முழுவதும் தடை செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















