ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் இருவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
போன்டி கடற்கரையில் ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டத்திற்காக ஏராளமானோர் கூடியிருந்தனர்.
அங்கு வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் மக்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இச்சம்பவத்தில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தச் சூழலில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சஜித் அக்ரம் மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம் என்றும், இவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
















