ஆதிதிராவிடர் நலத்துறையில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர் விடுதிகள் மூடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும், ஆயிரத்து 331 சமூக நீதி விடுதிகளில், 65 ஆயிரம் மாணவ – மாணவியர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
ஆனால், உணவு சரியில்லாதது, போதிய வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால், சில ஆண்டுகளாக, விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்து வருகிறது.
விடுதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட 98 ஆயிரம் மாணவர்களில், தற்போது, 65ஆயிரம் பேர் மட்டுமே தங்கி உள்ளனர்.
முந்தைய அதிமுக ஆட்சியில், மாணவர்கள் எண்ணிக்கை, 80 ஆயிரம் ஆக இருந்த நிலையில், தற்போதைய திமுக ஆட்சியில், 6 ஆகக் குறைந்துள்ளதுந்துள்ளது.
இதனால், மாணவர்கள் சேர்க்கை இல்லாத விடுதிகள், குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள விடுதிகள் போன்றவற்றை அதிகாரிகள் மூடி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் வரை, கோவை, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா 10 விடுதிகள் உட்பட, 51 சமூக நீதி விடுதிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
















