பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியில் ஏராளமானோர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு பங்கேற்றனர்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25 ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.
இதையொட்டி பல்வேறு நாடுகளில் மக்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு நேரத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியும், ஆடிப்பாடியும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைக்கட்டத் தொடங்கியுள்ளது.
பண்டிகையை ஒட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும் மாரத்தான் ஓட்டப்போட்டியும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்தப் போட்டியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
















