மீன்வளத் துறையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் முதல்முறையாக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை, லட்சத்தீவு நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய இந்த மாநாட்டில், நாடு முழுவதும் இருந்து 22 முக்கிய முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், இனி அங்கீகரிக்கப்பட்ட அனுமதிச் சீட்டு வாயிலாகச் சட்டப்பூர்வமாக மீன்பிடிக்க முடியும் எனக்கூறியுள்ளார்.
















