திருவண்ணாமலையில் நடைபெற்ற பாஜக பயிலரங்க கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலுவை தோற்கடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கான பாஜக பயிலரங்க கூட்டம் அவலூர்பேட்டை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பாஜக மாநில அமைப்பாளர் கிருஷ்ணகுமார், மாநில செயலாளர் ஆனந்த பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் வாக்குச் சாவடி முகவர்களுக்குச் சட்டமன்ற தேர்தல் குறித்த பயிற்சிகளை வழங்கினர்.
மேலும் பயிலரங்கில் 15 ஆண்டுகளாகத் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பதவி வகிக்கும் எ.வ.வேலுவை தோற்கடிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
















