சீனாவில் நடிகையை போலத் தோற்றமளிக்க 9 கோடி ரூபாய் அளவிற்கு அறுவை சிகிச்சை செய்து புகழின் உச்சியை அடைந்தார்.
வரி ஏய்ப்பு சர்ச்சையில் நடிகை சிக்கியதால் அவரை போலத் தோற்றமளித்த பெண்ணும் தனது வாழ்வில் திருப்பத்தைச் சந்தித்துள்ளார். சீனாவின் பிரபலமான நடிகை ஃபேன் பிங்பிங். இவரை கண்டு இன்ஸ்பிரேஷனான ஷென்சென் நகரை சேர்ந்த ஹீ செங்சி என்ற பணக்கார பெண் அவரை போலவே தோற்றமளிக்க விரும்பி உள்ளார்.
இதற்காக அவர் 2008 முதல் 2016 வரை 37 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். ஃபேன் பிங்பிங்கைப் போலவே தோற்றமளிக்க மூன்று இரட்டை கண் இமை அறுவை சிகிச்சைகள் உட்பட 37 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.
இதற்காக அவர் சுமார் 9 கோடி ரூபாயை செலவழித்ததாகக் கூறப்படுகிறது. செங்சி ஃபேன் பிங்பிங்கைப் போலவே தோற்றமளித்தால் அவருக்கு “லிட்டில் ஃபேன் பிங்பிங்” என்ற புனைப்பெயர் கிடைத்தது. இதையடுத்து அவர் சிறுசிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கிய நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சைகளில் ஈடுபட்ட மருத்துவர்களின் ஒருவரான யூ சியாவோகுவானை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சியாவோகுவானும், ஃபேன் பிங்பிங்கின் முன்னாள் காதலனான லி செனைப் போலத் தோற்றமளிக்கப் பல அறுவை சிகிச்சைகளைச் செய்துகொண்டார். இதையடுத்து சீனா முழுவதும் பல்வேறு வணிக நிகழ்வுகளுக்கு இந்த ஜோடி அழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சீன நடிகை ஃபேன் பிங்பிங் வரி ஏய்ப்பு சர்ச்சைகளில் சிக்கி, அவரது பொது நற்பெயர் பெரும் சரிவைச் சந்தித்த பிறகு, லிட்டில் ஃபேன் பிங்பிங் ஆக இருக்கும் செங்சியின் வாழ்க்கையும் சிக்கலான திருப்பத்தை அடைந்துள்ளது.
















