மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்திய உயர்கல்வி ஆணைய மசோதாவை அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாவின் படி, பல்கலைக்கழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஆகியவை கலைக்கப்பட்டு, இதற்கு மாற்றாக அனைத்தும் இந்திய உயர்கல்வி ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
இதன் மூலம் கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள், பொறியியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகங்கள் ஆகியவை ஒரே ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நாடாளுமன்ற கூட்டுக்குழு விவாதத்திற்கு அனுப்பிவைக்க முடிவு கிரண் ரிஜிஜூ முடிவு செய்துள்ளார்.
















