கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்து இரண்டு ஆண்டுகள் கழித்தும், ரயில் நிலையம் மற்றும் நடை மேம்பாலம் பயன்பாட்டிற்கு வராததால், பயணிகள் கடும் அவதியுற்று வருகின்றனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாகி இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்டது. வார நாட்களில் 45 ஆயிரம் பயணிகள் வரையும், வார இறுதி மற்றும் பண்டிகை நாட்களில் சுமார் ஒரு லட்சம் பயணிகள் வரையும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
திறப்பு விழாவின் போது, ஓராண்டில் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்படும் என திமுக அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், இரண்டாண்டுகள் கடந்தும் 80 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது.
நடைமேம்பாலப் பணிகள் 60 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என கூறப்படுகிறது.
எனவே, பயணிகளின் நலன்களை கருத்தில் கொண்டு அத்தியாவசிய போக்குவரத்து வசதிகளை பூர்த்தி செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















