மார்கழி மாத பிறப்பையொட்டி அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவன் கோயிலில் இருந்து பஜனை பாடியப்படி சிறுவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாளை கணவனாக அடையும் பெருமையை ஆண்டாள் பெற்றதாக ஐதீகம். மார்கழி மாதத்தில் கோயில்களில் பக்தர்கள் குழுக்களாக இணைந்து சிவபெருமானையும், பெருமாளையும் போற்றி பாடி வருகின்றனர்.
அந்த வகையில், நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவன் கோயிலில் அதிகாலை சிறுவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து திருவெம்பாவை, தேவாரம், திருப்பள்ளிஎழுச்சி, திருப்பாவை போன்ற பாடல்களை பாடியபடி அகஸ்தீஸ்வரர் கோயிலின் நான்கு ரத வீதிகளில் 50-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஊர்வலமாக வந்தனர்.
















