முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற வரலாற்று சாதனை படைத்த சாய் ஜாதவ்!
Sep 14, 2026, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற வரலாற்று சாதனை படைத்த சாய் ஜாதவ்!

Murugesan M by Murugesan M
Dec 16, 2025, 02:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் 93 ஆண்டுகளில் முதல்முறையாகச் சாய் ஜாதவ் என்பவர் பெண் ராணுவ அதிகாரி என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

இந்திய ராணுவ அகாடமியில் 1932 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதில் இருந்து பல ஆண்டுகளாக ஆண் அதிகாரி கேடட்கள் (Cadet) மட்டுமே பட்டம் பெற்றுள்ளனர். இதுவரை 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் அதிகாரிகளே பட்டம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கோலாப்பூரைச் சேர்ந்த சாய் ஜாதவ் என்ற 23 வயதான பெண், ராணுவ அகாடமியில் ஆண் கேடேட்டுகளுடன் சமமானத் தரநிலைகள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்து, ஆறு மாதங்கள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டார்.

தனது பட்டப்படிப்புக்குப் பிறகு தேசிய அளவிலானத் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலமே அவர் ராணுவ அகாடமியில் சேரும் வாய்ப்பைப் பெற்றார்.

டேராடூனில் உள்ள ராணுவ அகாடமியில் இருந்து வெளியேறி, லெப்டினன்ட் பதவியில் டெரிட்டோரியல் ஆர்மியில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் ராணுவ அகாடமியில் இருந்து பயிற்சியை வெற்றிகரமாக முடித்து வெளியேறிய முதல் பெண் அதிகாரி என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

சாய் ஜாதவ்வின் கொள்ளுத் தாத்தா பிரிட்டிஷ் ராணுவத்திலும், தாத்தா இந்திய ராணுவத்திலும் பணியாற்றினர்.

அவரது தந்தை சந்தீப் ஜாதவ் இன்றும் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Sai Jadhav creates history by becoming the first female army officerமுதல் பெண் ராணுவ அதிகாரி
Share
Tweet
SendShare
Previous Post

அம்பாசமுத்திரம் அருகே சிவன் கோயிலில் இருந்து பஜனை பாடியப்படி ஊர்வலமாக சென்ற சிறுவர்கள்!

Next Post

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் மூச்சு அடைப்பை நீக்கிப் பிராண வாயு செலுத்தும் குழாயை கண்டுபிடித்த தலைமை மருத்துவர்!

Related News

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies