புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்ற லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கி உள்ளாதாக அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தொடக்கம் மற்றும் அறிமுக விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சிங்கப்பூர், டென்மார்க் போன்று புதுச்சேரியை மாற்றுவேன் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் மக்களுக்குச் சேவை செய்யவே கட்சி தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
















