ஐரோப்பாவில் உள்ள அன்டோரா நாட்டில் குளிர்காலத்தையொட்டி பனிச்சறுக்கு விளையாட்டுகள் களைகட்டி உள்ளன.
அன்டோரா நாட்டின் சிறப்புகள் அதன் பிரமிக்க வைக்கும் பைரனீஸ் மலைகளாக உள்ளது. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த நாடு, அழகான மலைக் காட்சிகள், ஸ்கை ரிசார்ட்டுகள் மற்றும் நீண்ட தூர நடைப்பாதைகளுக்கு பிரபலமானது.
உலகிலேயே அதிக ஆயுட்காலம் கொண்ட நாடுகளில் இதுவும் ஒன்று, நல்ல சுகாதாரம் மற்றும் அமைதியான சூழலுக்குப் பெயர் பெற்றது.
இங்குக் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி பனிச்சறுக்கு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது பனிக்காலம் தொடங்கி உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அன்டோரா நாட்டிற்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
ஏராளமான சுற்றுலா பயணிகள் பனிச்சறுக்கு விளையாடி உற்சாகமடைந்து வரும் காட்சிகள் வைரலாகி உள்ளது.
















