வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் சென்றடைந்தார்.
இந்தப் பயணத்தில், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சோக், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் வெளியுறவு அமைச்சர் கிடியோர் சார் ஆகியோருடன் முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பெஞ்சமின் நெதன்யாகு விரைவில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வார் எனக் கூறப்படும் நிலையில், அமைச்சர் ஜெய்சங்கர் இஸ்ரேல் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
















