.தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே அடுத்தடுத்த வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் புதூர்ப் பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம், கார் மீது மோதியது.
இந்த விபத்தில் அருணகிரி, கலையரசி, முனியப்பன், தினேஷ் அகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே விபத்து நிகழ்ந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் ஆய்வு செய்தார்.
















