5 மாநிலங்களின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் போலி வாக்காளர்களை நீக்கும் வகையில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா ஆகிய 3 மாநிலங்களிலும் புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதில், மேற்கு வங்கத்தில் இறந்தவர்கள் 24 லட்சம் பேர், இடம்பெயர்ந்தவர்கள் 19 லட்சம் பேர், போலி வாக்காளர்கள் 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் என 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, தமிழகத்தில், வாக்காளர் படிவங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் முடிவுக்கு வந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.
















