நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானத்தை தள்ளுபடி செய்ய கோரி சென்னையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ஏற்காத திமுக அரசு கூட்டணி கட்சி எம்பிக்களிடம் கையெழுத்து பெற்று, நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரி நாடாளுமன்றத்தில் தீர்மான நோட்டீஸ் வழங்கியது.
இந்நிலையில் இந்த தீர்மானத்தை தள்ளுபடி செய்யக் கோரி சென்னையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மாநில வழக்கறிஞர் அணி தலைவர் குமரகுரு தலைமையில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பட்டத்தில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருந்த தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பதவி நீக்க தீர்மானத்தை ரத்து செய்யவில்லை எனில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
















