அமெரிக்காவில் தேசிய காவல்படை வீரர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, 39 நாடுகளுக்கு பயண தடையை விரிவுபடுத்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே அமெரிக்க தேசிய காவல் படை வீரர்கள் மீது ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் தேசிய காவல் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களின் அனைத்து குடியேற்ற கோரிக்கைகளையும் கால வரையின்றி அமெரிக்கா நிறுத்தி வைத்தது. ஏற்கனவே அமெரிக்காவுக்குள் செல்ல 19 நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
அந்த பட்டியலில் மேலும் சில நாடுகளின் பெயரை சேர்ப்பது குறித்து டிரம்ப்பின் நிர்வாகம் பரிசீலித்து வந்தது. இந்நிலையில் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான பயண தடையை 39 நாடுகளுக்கு விரிவுபடுத்தும் கோப்பில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
















