திருச்சி மேலப்புதூர் அருகே 2 தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு வேகமாக இயக்கப்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
அப்போது ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால், வாகனத்தில் இருந்த நடத்துநர் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதனால் அப்பேருந்தில் பயணம் செய்த பயணிகள், உனடியாக இறங்கினர். தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார், ஓட்டுநர்கள் இருவரையும் பிடித்து விசாரணைச் செய்தனர்.
அதில் ஓட்டுநர் தங்கராஜ் என்பவர், மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
















