திருப்பூரில் 60 அடி உயரத்தில் கிரேனில் தொங்கியபடி யோகாசனங்கள் செய்து மாணவ, மாணவிகள் உலகச் சாதனை படைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 60 அடி உயரம் கொண்ட கிரேனில் தொங்கிய படியும், கண்ணாடி பெட்டிக்குள் இருந்தபடியும் யோகாசனங்களைச் செய்து சாதனைப் படைத்தனர்.
இதனையடுத்து, உலகச் சாதனை யூனியன் அமைப்பு சார்பில் மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ்களும், பதக்கமும் வழங்கப்பட்டது.
















