சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் இண்டிகோ விமானங்கள் திடீரெனக் குறைக்கப்பட்டு வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்த புது விதிகளைக் காரணம் காட்டி, இண்டிகோ நிறுவனம், கடந்த 1 ஆம் தேதி முதல் விமான சேவைகளைக் குறைத்தது.
இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சிப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்தாலும், நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய விமான நிலையங்களில் இருந்து பிற நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இயக்கப்படும் இண்டிகோ விமானங்கள் குறைக்கப்பட்டு வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த குறைப்பு நடவடிக்கை விமான டிக்கெட் கட்டணம் அதிகரிக்க வழிவகுக்கும் எனவும், தமிழகம் மாற்று வழியைக் கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
















