சபரிமலையில் இதுவரை 26 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் 16-ம் தேதி சபரிமலையில் மண்டல கால பூஜைத் தொடங்கியது. இந்நிலையில் டிசம்பர் 16-ம் தேதி இரவு 8 மணி நிலவரப்படி, மொத்தம் 26 லட்சத்து 81 ஆயிரத்து 460 பக்தர்கள் ஐயப்பனைத் தரிசனம் செய்துள்ளனர் எனத் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதே போல பக்தர்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் பணியில் துப்பாக்கி ஏந்திய வனத்துறைக் காவலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அவசரக் கால உதவி படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
















