கரூர் மாவட்டம் சங்கரமலப்பட்டியில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்கரேஸ்வரர் கோயில் கோபுரத்தில் இருந்த கலசம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோயிலில் கும்பாபிஷேக விழா நடத்துவதற்காகச் செப்பனிடும் பணிகள் நடைபெற்று வந்தநிலையில், கலசம் திருடுபோய் உள்ளதாகக் கோயில் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாகக் கோயில் நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள கோயில் கோபுரக் கலசங்களையும் திருடிய கொள்ளையர்கள், அதில் ஏதும் இல்லாததால், அதனைக் கோயில் அருகே வீசி சென்றனர்.
















