டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியதற்கு, முந்தைய ஆம் ஆத்மி அரசின் நிர்வாகத் தோல்வியே காரணம் என அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் கடந்த சில மாதங்களாக மிக மோசமான உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவில் காற்றின் தரம் உள்ளது. இந்நிலையில் டெல்லிச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாலும் வெறும் 10 மாதங்களுக்குள் சுற்றுச்சூழல் மாசு அளவை முழுமையாகக் குறைக்க முடியாது எனக் கூறினார்.
மேலும், காற்று மாசு மோசமான நிலையில் நீடிப்பதற்கு டெல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
















