சென்னைவாசிகளால் பெரிதும் வரவேற்கப்பட்ட “ஸ்மார்ட் பைக்” திட்டம் திமுக அரசின் அலட்சியத்தால், பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. இதைப் பற்றிய சிறப்பு செய்தித் தொகுப்பைத் தற்போது பார்க்கலாம்..
சென்னை என்றாலே பரபரப்பான மக்கள் கூட்டமும். சாலைகளில் சிக்கித் திணறும் வாகனங்களும் நம் கண்முன்னே நிழலாடும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பாதசாரிகள் எளிதாக மற்ற பகுதிகளுக்குச் செல்லவும், கடந்த 2019ம் ஆண்டு சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்திய திட்டம்தான் ஸ்மார்ட் பைத் திட்டம்.
சென்னை மாநகராட்சியும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்மார்ட் பைக் மொபிலிட்டி நிறுவனமும் இணைந்து முதற்கட்டமாக மெரினா கடற்கரை, அண்ணா நகர், பூங்கா உள்ளிட்ட 76 இடங்களில் 500 ஸ்மார்ட் பைக்குகளைப் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தன…. இதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் செலவு செய்தது என்னவோ 30 கோடி தான் என்று கூறப்படுகிறது.
ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாய் கட்டணத்தில் கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட் பைக் திட்டம் தொடக்கத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. பேருந்து, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து நடந்து செல்லும் மக்களுக்குக் கைகொடுக்கும் வகையில் இருந்தது… தற்போதோ நிலைமைத் தலைகீழ் ஆகிவிட்டது, பராமரிப்பின்மை காரணமாக ஸ்மார்ட் பைக்குகள் தற்போது WORST பைக்குளாக மாறிவிட்டன..
மக்கள் ஆரோக்கியத்திற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டம், தற்போது நோய்வாய்பட்டுக் கிடக்கிறது… மழை, வெயிலில் சேதமடைந்த ஸ்மார்ட் பைக்குகள். பயன்படுத்த முடியாத நிலையில், குப்பைகளோடு குப்பைகளாய் கண்களில் தென்படுகின்றன.
சென்னையில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்மார்ட் பைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தை மோசமான நிர்வாகத்தால், சென்னை மாநகராட்சி அலட்சியப்படுத்திவிட்டது என்கிறார்கள் இவர்கள்.
சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் பைக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதும், திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதும் பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
















