விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இருபது பேர் பங்கேற்றனர்.
மேலும், கட்சியின் பொதுச்செயலாளர் முரளி சங்கர், கெளரவத் தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கட்சியின் வளர்ச்சி, அடுத்த கட்ட செயல்பாடுகள், சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் போன்றவைக் குறித்து, இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
















