தாம்பரம் அரசு மருத்துவமனையில் ஒரே ஒரு எலும்பு முறிவு மருத்துவர் மட்டும் இருப்பதால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதிதாகத் திறக்கப்பட்ட இந்த அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை எனப் புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவில் ஒரே ஒரு மருத்துவர் மட்டும் இருப்பதால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















