வங்கக்கடல் பகுதியில் விமானங்கள் பறக்க தடைவிதித்து ‘நோடம்’ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட வான்வெளிப் பகுதியை சிவில் விமானப் போக்குவரத்திலிருந்து விடுவிக்க வேண்டியிருக்கும்போது நோடம் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இது வணிக விமானங்களை ராணுவ நடவடிக்கைப் பகுதிகளிலிருந்து விலக்கி வைப்பதன் மூலம் பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தடுக்க உதவுகிறது.
நோடம் அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், குறிப்பிட்ட வான்வெளிப் பகுதிக்குள் எந்த சிவில் விமானமும் பறக்க அனுமதிக்கப்படாது. அதன்படி, வரும் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இந்தியா கடற்படை சார்பில் ஏவுகணை சோதனை நடத்தப்படவுள்ளது. இதனால், வங்கக்கடல் பகுதியில் விமானங்கள் பறிக்க தடைவிதித்து மத்திய அரசு நோடம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
















