கர்நாடகா மாநிலம் கார்வார் அருகே சீன ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட சீகல் படல் பறவை கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு, கார்வார் அருகே ஜிபிஎஸ் டிரான்ஸ்மிட்டர் பொருத்தப்பட்ட கழுகு கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அதே போன்றதொரு சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.
கடம்பா கடற்படை தளப் பகுதியில் சீன ஜிபிஎஸ் டிராக்கருடன் சீகல் கடல் பறவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கார்வார் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
















