அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், உக்ரைனில் கூடுதலான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றும் எனப் புதின் எச்சரித்துள்ளார்.
வருடாந்திர கூட்டத்தில் ராணுவ தளபதிகள் மத்தியில் உரையாற்றிய அவர், ராஜதந்திர முயற்சிகள் தடைபட்டால், ரஷ்யா ராணுவ பலத்தை நம்ப தயாராக உள்ளது எனக் கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைகள் மூலம் மோதலை தீர்ப்பதை ரஷ்யா விரும்புகிறது என்றும், அதற்காக ரஷ்யா பாடுபடும் எனவும் தெரிவித்துள்ளார்.
















