சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கில் திருவிதாங்கூா் தேவஸ்தான வாரியத்தின் முன்னாள் நிா்வாக அதிகாரியை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது.
2019 ஆம் ஆண்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகர் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்டன. அப்போது, தங்கத்தின் எடை குறைந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட எஸ்ஐடி, மோசடி தொடர்பாக இரண்டு தனித்தனி வழக்குகளை விசாரித்து வருகிறது.இந்த இரு வழக்குகளிலும் தொடர்பு உடையவர்களாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி உள்ளிட்ட ஆறு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
இந்த சூழலில், தேவஸ்தான வாரியத்தின் முன்னாள் நிா்வாக அதிகாரியான
ஸ்ரீகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
















