கிராம உதவியாளர்களின் கோரிக்கைகள் ரத்தத்தால் எழுதி முதலமைச்சரிடம் வழங்கப்படும் என வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் முதலமைச்சரை சந்திக்கும் பேரணி நடைபெற்றது.
அலுவலக உதவியாளருக்கு இணையான ஊதியம், கல்வி தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் குரு நாகப்பன், திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகப் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தான் பேரணியாகச் செல்வதாகவும், தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் எனவும் கூறியுள்ளார்.
மேலும், தங்களின் கோரிக்கைகளை ரத்தத்தால் எழுதி முதலமைச்சரிடம் வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
















