தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் நெல்லை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க ரொக்க பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில், சமீபகாலமாக ஸ்கேன் எடுப்பதற்கான கட்டணம் ஆன்லைன் பரிவர்த்தனையில் மட்டும் பெறப்பட்டு வந்தது.
இதனால், டிஜிட்டல் பரிவர்த்தனை பற்றி அறியாத கிராமப்புற மக்கள் வங்கிக் கணக்கில் போதிய பணம் இருந்தும் ஸ்கேன் எடுக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இது தொடர்பாக, தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, நெல்லை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க இனி ரொக்கம் பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றத்தால் நிம்மதியடைந்துள்ள கிராம மக்கள், தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.
















