இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை விரைவில் அமைக்கும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
2 நாட்கள் பயணமாக ஓமன் சென்ற பிரதமர் மோடி, தலைநகர் மஸ்கட்டில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்துக்களின் தீபாவளி பண்டிகையை கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இணைத்து இந்தியாவின் கலாசாரத்திற்கு யுனெஸ்கோ பெருமை சேர்த்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தியா – ஓமன் இடையே நெருக்கமான உறவு இருந்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஓமன் நாட்டின் விண்வெளி கனவுகளுக்கு இந்தியா துணை நிற்கும் என உறுதிபட கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியா சார்பில், வெகுவிரைவில் விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
















