எப்பிஐ துணை இயக்குநர் பொறுப்பில் இருந்து அடுத்த மாதம் விலகப்போவதாக டான் போங்கினோ அறிவித்துள்ளார்.
முன்பு சட்ட அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வந்த போங்கினோ, நியூயார்க் போலீசாகவும், உளவாளியாகவும் வேலை செய்து வந்தார்.
கடந்த மார்ச் மாதம் எப்பிஐயின் துணை இயக்குநராகப் பொறுப்பேற்ற நிலையில், இந்தப் பதவியை 10 மாதங்களே வகித்துள்ளார்.
இந்நிலையில் ராஜினாமா அறிவிப்பை வரவேற்றுள்ள அதிபர் டிரம்ப், போங்கினோவின் முடிவு சிறப்பானது எனக் கூறியுள்ளார்.
தனது பதவி விலகும் முடிவிற்கான காரணத்தை போங்கினோ தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.
















