அமெரிக்காவின் பாதுகாப்பு படை வீரர்களுக்குக் கிறிஸ்துமஸ் பரிசாகத் தலா 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க மக்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்காவின் வலிமையை மீட்டெடுத்து 10 மாதங்களில் 8 போரை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகக் கூறினார்.
14 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்குக் கிறிஸ்துமஸுக்கு முன்பாக சிறப்புப் போர்வீரர் ஈவுத்தொகை வழங்கப்படும் என்பதில் பெருமை கொள்வதாகத் தெரிவித்தார்.
மேலும், 1776-ல் அமெரிக்கா சுதந்திரம் பெற்றதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வீரருக்கும் 1776 டாலர்களை வழங்கவுள்ளதாக டிரம்ப் கூறினார். அது இந்திய மதிப்பில் 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
















