தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
“கிரிவலத்திற்கு சென்றஆந்திராபெண்ணை 2 போலீசார், தாய் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்தத சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
“காவல்துறை முதல் அமைச்சரின் அவுட் ஆப் கண்டரோலில் உள்ளது என்றும், ஒரு டி.ஜி.பி-ஐ கூட அவர்களால் நியமனம் செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்,
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டால் அதனை நிறைவேற்ற காவல்துறை மறுப்பதாகவும் அவர் கூறினார். 2026 தேர்தலில் நிச்சயமாக தர்மம் வெல்லும் என்றும் நயினார் நாகேந்தின் குறிப்பிட்டார்.
















