இன்கிலாப் மஞ்சோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஷெரீஃப் உஸ்மான் பின் ஹாடி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்காவில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் முன்பு போராட்டம் நடைபெற்றது.
2024-ல் வங்கதேசத்தில் அரசு வேலைகளில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை சீர்திருத்தக் கோரி, மாணவர்கள் தொடங்கிய மக்கள் கிளர்ச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான ஷெரீஃப் உஸ்மான் பின் ஹாடி என்பவர் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார்.
கடந்த 12ஆம் தேதி பிஜோய்நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மர்மநபரால் சுடப்பட்டார். தலையில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த ஹாடிக்கு, டாக்கா மருத்துவமனைவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், சிங்கப்பூருக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட ஹாடி, இரவு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, டாக்காவின் சட்டோகிராம் பகுதியில் உள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பு ஒரு குழுவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஹாடி கொல்லப்பட்டதைக் கண்டித்தும், அவாமி லீக் மற்றும் இந்தியாவிற்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், தூதரக வளாகத்தில் கூடியிருந்த போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். மேலும், சட்டம்-ஒழுங்கை பராமரிக்க இந்திய துணை தூதரகம் அமைந்துள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















