நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ABVP அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக நிர்வாகத்தைக் கண்டித்தும், மாணவர்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தியும் ABVP அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக் கழக நுழைவாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், UGC விதிமுறைகளைப் பின்பற்றி மாணவர்களுக்குத் தாமதமின்றி சான்றிதழை வழங்கக் கோரியும், மாணவர்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் மாணவர் பேரவை தேர்தலை உடனடியாக நடத்தவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, கோரிக்கைகள் மீது பல்கலைக் கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், அடுத்தகட்டமாகப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் மாணவர் அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.
















