சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பராசக்தி படத்தின் கண்காட்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீ லீலா நடிப்பில் பராசக்தி திரைப்படம் உருவாகியுள்ளது. படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.
படத்தில் இடம்பெற்றுள்ள பொருட்களை வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
படம் 1960 களில் நடக்கும் கதை என்பதால் படத்தில் பயன்படுத்தப்பட்ட கார், உடைகள் என 60 களின் பொருட்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியைப் படக்குழுவினர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா தங்களின் உரிமைக்காக மக்கள் போராடியதை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் படத்தை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சூரரை போற்று படத்தின் மூலம் தனக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த சுதா கொங்கரா படத்தின் நடித்தது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். மேலும் படத்தில் நடித்துள்ள அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
















