அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் விமான விபத்தில் முன்னாள் NASCAR கார் பந்தய வீரர் கிரெக் பிஃபிள் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வடகரோலினாவின் ஸ்டேட்ஸ்வில் பகுதியில் சிறிய ரக ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முன்னாள் NASCAR கார் பந்தய வீரர் கிரெக் பிஃபிள், அவரது மனைவி, மகள், மகன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
கடந்தாண்டு வெள்ளத்தின் போது கிரெக் பிஃபிள் தன்னால் முடிந்த நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கிய நிலையில், கிரெக் பிஃபிள் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்ததது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
















