2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாகச் சாகித்ய அகாடமி விருது கருதப்படுகிறது.
இந்நிலையில், இன்று 2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
ஆனால், விருதுகளை இறுதி செய்வதில் இழுபறி நீடிப்பதால் இன்றைய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
















