தமிழக அரசுடன் ஷ்னைடர் எலெக்ட்ரிக் குழுமம் 718 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் ஷ்னைடர் குழுமம், தன்னுடைய நிலையை மேலும் விரிவாக்கம் வகையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை மற்றும் கோவையில் அமைந்துள்ள ஷ்னைடர் எலக்ட்ரிக் குழுமத்தின் ஆலைகளை விரிவாக்கம் செய்யவும், ஒசூரில் மின்கலன்கள் மற்றும் குளிர்விப்பு தீர்வுகளுக்கான புதிய ஆலை அமைக்கும் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
718 கோடி ரூபாய் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
















