ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைச் சுற்றி வளைத்துப் பிடித்து படுகாயமடைந்த நபருக்கு மக்கள் பலரும் ஒன்றிணைந்து நிதியுதவி அளித்துள்ளனர்.
சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் ஹனுக்கா பண்டிகையின்போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதியை, அகமது அல் அகமது என்ற நபர் பின்பக்கமாகச் சென்று பிடித்துத் துப்பாக்கியைப் பறித்தார். இந்தக் காட்சிகள் வைரலான நிலையில் அவரை ஆஸ்திரேலிய மக்கள் ஹீரோ எனக் கொண்டாடினர்.
இருப்பினும் அங்கு இருந்த மற்றொரு பயங்கரவாதி அகமது அல் அகமதுவை துப்பாக்கியால் சூட்டதில் அவர் படுகாயமடைந்தார்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு மக்கள் பலர் இணைந்து நிதியுதவி அளித்துள்ளனர். அவரின் துணிச்சலை பாராட்டி 2.5 மில்லியன் டாலர் பணத்தை மக்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
















