ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவிலான சோள பயிர்களை விலங்குகள் மற்றும் பறவைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கமுதி அடுத்த கள்ளிகுளம், இலந்தகுளம் பகுதிகளில் சுமார் ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில் பருத்தி, மிளகாய், சோளம் உள்ளிட்ட சிறுதானிய பயிர்களை விவசாயிகள் பயிரிட்டனர்.
அறுவடைக்கு தயாரான பயிர்களை வனப்பகுதிகளில் இருந்து வெளியேறிய 100க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள், மான்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் சேதப்படுத்தி வந்துள்ளன.
இதனால் வேதனையடைந்த விவசாயிகள், தினமும் 6 ஆயிரம் ரூபாய் செலவு செய்து வானவெடி, அணுகுண்டு போன்ற பட்டாசுகளை வெடித்தும், ஒலிபெருக்கி வாயிலாகச் சத்தம் எழுப்பியும் விலங்குகளை விரட்டி வருகின்றனர்.
வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாகக் குற்றஞ்சாட்டும் விவசாயிகள், சம்மந்தப்பட்ட அமைச்சர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















