பாரத் கால் டாக்ஸி செயலி வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் டெல்லியில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
ஆட்டோ, கார், பைக் வாயிலான பொது போக்குவரத்து சேவையை ஆன்லைனில் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதியை, நாட்டின் பல்வேறு நகரங்களில் தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன.
இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் ஓட்டுநர்களிடம் இருந்து அதிக கமிஷன் பிடித்தம் செய்வதாகப் புகார் உள்ளதால் சஹாகர் டாக்சி என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனத்தை ஓட்டுநர்கள் தொடங்கி உள்ளனர்.
ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு நிறுவனம் சார்பில் பாரத் டாக்சி என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இதை டெல்லியில் ஜனவரி 1ல் அறிமுகப்படுத்த உள்ளனர். டிரைவர்களே நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் இருப்பதால் பூஜ்ய கமிஷன் முறையில் செயலியை வடிவமைத்துள்ளனர்.
















