பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தித் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பணிகளை புறக்கணித்துக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகம் முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகத் திண்டுக்கல் மருத்துவமனை செவிலியர்கள், பணிகளை புறக்கணித்துக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி அரசு மருத்துவமனை செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த நியமனங்களை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
செவிலியர்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர்.
















