திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்ததில் கணவன், மனைவி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
பொன்னேரி அடுத்த உப்பரபாளையத்தில் மணி என்பவரின் மனைவி தேவி, வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாகக் கேஸ் கசிந்து சிலிண்டர் வெடித்தது. இதில் வீடு இடிந்து விழுந்த நிலையில், கணவன், மனைவி இருவரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இருவரும் ஆபத்தான நிலையில் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி அணைத்தனர்.
இந்த விபத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தாய், மகனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சிலிண்டர் வெடிப்பு விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
















